நெல்லையில் பெண்களிடம் தொடர் வழிப்பறி: அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர் கைது
பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை,
பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீசார் ரோந்து
நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். டவுன் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் எஸ்கால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நெல்லை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கருப்பந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிற்குமாறு சைகை செய்தனர். ஆனால், போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். உடன் வந்த மற்றொருவர் பிடிபட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ‘நெல்லை மணிமூர்த்தீசுவரம் வாழவந்தான் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமகிருஷ்ணமூர்த்தி (வயது 22) என்பதும், அவர் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
சித்த மருத்துவ கல்லூரி மாணவர் கைது
தொடர் விசாரணையில், அவர் நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் ஒரு பெண்ணிடமும், கொக்கிரகுளத்தில் ஒரு பெண்ணிடமும் நகை பறித்தது தெரியவந்தது. அந்த 2 பெண்களின் நகைகளும் கவரிங் நகையாகும். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story