பரமக்குடி அருகே ரெயில்வே கேட் இல்லாததால் அச்சத்துடன் தண்டவாளத்தை கடந்து செல்லும் கிராம மக்கள்
பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் ரெயில்வே கேட் இல்லாததால் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்குள் செல்ல வேண்டுமானால் இந்த பகுதியில் செல்லும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுவரை அங்கு ரெயில்வே கேட் அமைக்கப்படாமல் இருப்பது அந்த கிராமத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் உள்பட அனைத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். புகார் கொடுத்தால் அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு செல்வதோடு சரி. அந்த பகுதியில் ரெயில்வே கேட் அமைப்பதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை என்று புலம்பு கின்றனர்.
இந்த வழியாக காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும்போதும், மாலையில் திரும்பி வரும்போதும் அவர் களை பத்திரமாக அழைத்து வர பெற்றோர்கள் அங்கு சென்று காத்திருக்கின்றனர். இரவு நேரங்களில் தனியாக தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ரெயில்வே கேட் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story