திருப்பத்தூர் அருகே குழாய் உடைந்து ஓராண்டாக வீணாகும் காவிரி குடிநீர்
திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஓராண்டாக குடிநீர் வீணாகி வருகிறது.
திருப்பத்தூர்,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2009-ம் ஆண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் 2 மாவட்டங்களுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கென்று குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தனி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது கூட்டுக்குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் வடிகால் வாரியமும் அடைப்பை சரிசெய்வது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் வழியாக செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய் ஆத்தங்கரைப்பட்டி என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டு ஓராண்டாக குடிநீர் வீணாகி வயல்வெளிகளிலும், வெளியாத்தூர் கண்மாயிலும் நிரம்பி வருகிறது. மேலும் குழாய் உடைப்பின் காரணமாக சாலை அரிக்கப்பட்டு ஆற்றுநீர் ஓடுவதுபோல் அந்த இடம் காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்பினர் குடிநீர் குழாயை சரிசெய்ய மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்தநிலையில் குடிநீர் வீணாகும் பகுதியில் டி.டி.வி.தினகரன் அணி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான கே.கே.உமாதேவன் மற்றும் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர்கள் ரகீம், சரவணன் உள்ளிட்ட கட்சியினர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீர் குழாய் உடைந்து நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. சிலர் வீணாகும் இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயமும் செய்து வருகின்றனர். சிலர் அவற்றை தண்ணீர் லாரிகளில் பிடித்து விற்பனை செய்கின்றனர். திருப்பத்தூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் வீணாவதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே உடனடியாக இதனை சரிசெய்து அனைத்து மக்களுக்கும் குடிநீர் சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் கண்டனம் தெரிவித்து மறியல் போராட்டம் நடைபெறும் என்றனர்.

Related Tags :
Next Story