கூடலூர் அருகே பரபரப்பு சம்பவம்: ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்ட டிரைவர் பரிதாப சாவு


கூடலூர் அருகே பரபரப்பு சம்பவம்: ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்ட டிரைவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 18 Feb 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். அவர் முன்கூட்டியே பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினார்கள்.

கூடலூர்,

பெரியகுளம் தென்கரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 34). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் பெரியகுளத்தில் இருந்து குமுளி செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். நவநீதகிருஷ்ணன் என்பவர் கண்டக்டராக சென்றுள்ளார்.

இந்த பஸ் கூடலுரை அடுத்த தம்மணம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்டாலினுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கினார்கள். பின்னர் குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சில் அவரை ஏற்றி கம்பத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story