திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கடையூர்,
நாகை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று இரவு 7.40 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். அப்போது கவர்னரை, தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பூர்ணகும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கவர்னர், கோவிலில் உள்ள வில்வநாதன், விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். கவர்னர் வருகையையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கவர்னர், இரவு 8.10 மணிக்கு திருக்கடையூரில் இருந்து காரில் புறப்பட்டு திருநள்ளாறு சென்றார்.
அப்போது இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மாரியப்பன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். கவர்னர் வருகையையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story