போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
வலங்கைமான் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள லாயம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 42). இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள செங்கல் சூளையில் இருந்து செங்கலை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதா, விஜயகுமார் ஆகியோர் அங்கு வந்து லாரியில் மணல் மறைத்து ஏற்றப்படுகிறதா? என சோதனை செய்துள்ளனர். அப்போது பிரபு வலங்கைமான் முழுவதும் உள்ள லாரிகளில் ஏன் இதுபோல் சோதனை செய்யவில்லை என கூறி இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிடம் வாக்குவாதம் செய்து, அவரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும் பிரபு, அவரது மனைவி தாரணி(32), பிரபுவின் தாய் பழனியம்மாள்(60) ஆகியோர் மஞ்சுளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சுளா வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பழனியம்மாள், தாரணி ஆகிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story