மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
பனங்குடி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
நன்னிலம்,
நன்னிலம் வட்டம், பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். நாகை கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசானது ஏழை, எளிய சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பஸ் பயண சலுகை அட்டை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யும் உதவியானது மிகவும் மகத்தான உதவியாக கருத்தப்படும்.
உதவி உபகரணங்கள்
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, முடநீக்கு சாதனம், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, நடைபயற்சிக்கு உதவிடும் பலதரப்பட்ட உபகரணங்கள், காது கேளாதோருக்கான நவீன காதொலி கருவி ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு மருத்துவ மதிப்பீடு செய்தல், அளவு எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாமினை மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 6 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால் உபகரணமும், ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன், தஞ்சை கூட்டுறவு விற்பனை இணையத்தின் துணைத்தலைவர் அன்பு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story