சத்துணவு பணியாளர் மயங்கி விழுந்து சாவு நீண்ட நேரமாக போலீசார் வராததால் சாலைமறியல்
வேதாரண்யம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த சத்துணவு பணியாளர் மயங்கி விழுந்து இறந்தார். நீண்ட நேரமாக சம்பவ இடத்திற்கு போலீசார் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் ரவிவீரன். இவருடைய மனைவி சுபலட்சுமி(வயது33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிவீரன் இறந்துவிட்டார். இதையடுத்து சுபலட்சுமி நெய்விளக்கு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு பணியாளராக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று சுபலட்சுமி திருத்துறைப்பூண்டிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது செங்காத்தலை கிராமத்தில் உள்ள நிறுத்தத்தில் அவர் இறங்கி அடுத்த பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே சுபலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் யாரும் சம்பவ இடத்திற்கு நீண்டநேரமாக வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சுபலட்சுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story