பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
வாலாஜா,
வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியின் 50-வது ஆண்டு பொன் விழா கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, 2001-ம் ஆண்டில் முதல் - அமைச்சராக பதவியேற்று கிராமப்புற பெண்கள் கல்வி பயில முதன் முதலில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் பெண்கள் பட்டப்படிப்பு முடித்தால் திருமண உதவி தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
வருகிற 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைக்கிறார். இப்படி பெண்களுக்கு என பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியின் 50-வது ஆண்டு பொன் விழாவையொட்டி அஞ்சல் தபால் தலை வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான், முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் ஏழுமலை, தாசில்தார் விஜயகுமார், ஆவின் தலைவர் வேலழகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story