போக்கியத்திற்கு கொடுப்பதாக கூறி ஒரே வீட்டை 4 பேரிடம் காட்டி பண மோசடி
திருப்பூரில் போக்கியத்திற்கு வீடு கொடுப்பதாக கூறி ஒரே வீட்டை 4 பேரிடம் காட்டி பண மோசடி செய்த வீட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை போக்கியத்திற்கு கொடுப்பதற்கு முடிவு செய்து புரோக்கர்கள் பலரிடம் சொல்லி வைத்திருந்தார். அதன்படி ஒரு புரோக்கர் மூலமாக புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் அந்த வீட்டிற்கு ரூ.6 லட்சம் பேசி முதல் கட்டமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை முத்துக்குமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.
இதேபோல் காலேஜ் ரோட்டை சேர்ந்த சரவணன் என்பவர் மற்றொரு புரோக்கர் மூலமாக முத்துக்குமாரிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரோஜா ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும், அம்மாபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும், முத்துக்குமாரிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. முத்துக்குமாரிடம் பணம் கொடுத்த 4 பேரும் வீட்டிற்கு எப்போது குடி வரலாம் என்று கேட்டபோது ஒரு வாரத்தில் வீடு காலியான உடன் வந்து விடலாம் என்று கூறி உள்ளார்.
ஒரு கட்டத்தில் முத்துக்குமார் காலம் கடத்தியதால் 4 பேரும் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட வீட்டின் முன்பு சந்தித்தபோது ஒரே வீட்டை காட்டி முத்துக்குமார் 4 பேரிடமும் பணம் வாங்கி மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும் இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அவர்களுடைய புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்காக முத்துக்குமாரை அழைத்த போது அவர் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். திருப்பூரில் ஒரே வீட்டை காட்டி 4 பேரிடம் பல லட்சம் ரூபாயை வசூல் செய்து விட்டு வீட்டு உரிமையாளர் தலைமறைவாகி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story