வனத்துறையினரை கண்டித்து கொடைக்கானலில் கடையடைப்பு
தங்கும் விடுதி ஊழியர்களை தாக்கிய வனத்துறையினரை கண்டித்து கொடைக்கானலில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூருக்கு சுற்றுலா சென்ற தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள், வனத்துறையினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தங்கும் விடுதி ஊழியர்கள் 12 பேர் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட வனத்துறையினரை கண்டித்தும், அவர்களை பதவி நீக்கம் செய்யக்கோரியும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது.
கூட்டத்துக்கு முன்னாள் நகரசபை தலைவர் கோவிந்தன் (தினகரன் அணி) தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் முகமது இபுராகிம் முன்னிலை வகித்தார். தங்கும் விடுதி ஊழியர்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விடுதி ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பில் 20-ந்தேதி கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கண்ணன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அப்துல் கனி ராஜா, தே.மு.தி.க. நகர செயலாளர் மோகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வினோத், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சேக் அப்துல்லா, பா.ம.க. நிர்வாகி சம்சுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி செந்தாமரை, வர்த்தகர் சங்க தலைவர் ராஜாமுகமது மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதேபோல் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், வருகிற 20-ந்தேதி வாகனங்களை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related Tags :
Next Story