காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 18 Feb 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதில் இருந்து கர்நாடகாவுக்கு 14.77 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரியும், தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தஞ்சை ரெயிலடியில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தலைமை நிலைய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநகர செயலாளர் விஸ்வாசெந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரன், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை. இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 29 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story