உஷாரய்யா உஷாரு
அவர் ஓரளவு சமூக அக்கறை கொண்டவர். அதனால் வீட்டைச் சுற்றிலும் மரம், செடி, கொடி, காய்கறிகள், கீரை வகைகள் எல்லாம் வளர்க்க ஆசைப்பட்டார்.
அவர் ஓரளவு சமூக அக்கறை கொண்டவர். அதனால் வீட்டைச் சுற்றிலும் மரம், செடி, கொடி, காய்கறிகள், கீரை வகைகள் எல்லாம் வளர்க்க ஆசைப்பட்டார். அவைகளை இயற்கை விவசாய முறையில் விளைவித்து, தன் வீட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளவற்றை லாப நோக்கமின்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்கவேண்டும் என்று விரும்பினார். இதற்கு அதிக இடம் தேவைப்பட்டது. அதனால் புற நகர் பகுதியில் சற்று விசாலானமான இடத்தை தேர்வு செய்து, வீட்டைக் கட்டினார். ஆசைப்பட்டது போல் தோட்டமும் அமைத்தார். 12-ம் வகுப்பு படிக்கும் மகன், மனைவி, மாமியார் ஆகியோரோடு அங்கு வசித்து வருகிறார்.
அது சற்று ஒதுக்குபுறமான பகுதி என்பதால் வீடு கட்டும் போதிருந்தே அவருக்கு பாதுகாப்பில் சில நெருக்கடிகள் ஏற்பட்டன. சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் வந்து தங்குவதாக போலீசார் சந்தேகப்பட்டனர். அதை அவரிடம் கூறி, ‘வீட்டையும் தோட்டத்தையும் பாதுகாக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும், எங்களுக்கும் பலனளிக்கும்’ என்று கூறினார்கள். குழுக்களாக சேர்ந்து போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் அந்த பகுதியில் அதிகம் இருந்ததால், அவரும் கண்காணிப்பு கேமராவை தனது வீட்டைச் சுற்றிலும் பொருத்தினார்.
கேமரா பொருத்திய பின்பு சந்தேகத்திற்கிடமான ஆட்களின் நடமாட்டம், அந்த தோட்டப்பகுதியில் குறைந்தது. அதன் சுற்றுவட்டாரத்தில் எங்கு குற்ற சம்பவங்கள் நடந்தாலும், போலீசார் அவரிடம் வந்து, ‘உங்கள் கேமராவில் அது தொடர்பான காட்சிகள் ஏதாவது பதிவாகியிருக்கிறதா?’ என்று கேட்பார்கள். இவரும் பிரச்சினைக்குரிய காட்சிகள் இருந்தால், போலீசுக்கு கொடுத்து உதவுவார்.
சமீபகாலமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்ததால், அவர் கேமரா காட்சிகளை பார்வையிடுவதில் அக்கறை காட்டவில்லை. நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இந்த நிலையில் பள்ளி மாணவனான மகன் சில நாட்களாக கேமராவில் பதிவான காட்சிகளை மிகுந்த ஆர்வத்தோடு, அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பது தாய்க்கு தெரிந்தது. இரவு நேரங்களில் ரகசியமாகவும் அதை பார்த்துக்கொண்டிருந்தான்.
மகனின் நடவடிக்கைகள் தாயாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, கணவரிடம் தனியாக, ‘அவன் தினமும் சினிமா பார்ப்பதுபோல் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அதில் என்ன காட்சிகள் பதிவாகியிருக்கிறது என்று பாருங்கள்’ என்றார்.
மகன் பள்ளிக்கு சென்ற பின்பு ஒருநாள், பொறுமையாக இருந்து கேமராவில் பதிவான காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு அதிர்ச்சி. அதிகாலை 3 மணிக்கு தோட்டத்தின் ஓரப்பகுதி மூலை வழியாக ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களும் தோட்டத்தின் உள்ளே கஷ்டப்பட்டு நுழைகிறார்கள். கையோடு கொண்டு வந்த பையில் இருந்து போர்வையை எடுத்து விரிக் கிறார்கள். பின்பு அங்கே பாலியல் விளையாட்டு அரங்கேறுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அந்த பைக்குள் சில காய்கறிகளையும் பறித்து எடுத்துக்கொண்டு அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக திரும்பிச் செல்கிறார்கள்.
அதே பெண் வெவ்வேறு ஆண்களுடன், வெவ்வேறு நாட்களில் அதே நேரத்தில் தோட்டத்திற்குள் வந்து கூத்தடித்துவிட்டு சென்று கொண்டிருப்பது காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிந்தது. அந்த காட்சிகளைத்தான் அவரது மகன் அவ்வப்போது ரகசியமாக பார்த்து பொழுதுபோக்கியிருக்கிறான்.
அதுவரை உள்ள பதிவுகளை எல்லாம் அழித்த அவர், இந்த பிரச்சினைக்கு எப்படி முடிவுகட்டுவது என்று சிந்தித்தார். மறுநாள் போலீசாரிடம் நட்புரீதியாக இதை ரகசிய தகவலாக சொன்னார். அவர்கள், ‘இரவில் கண்காணியுங்கள். அவர்கள் உள்ளே வந்ததும் எங்களுக்கு போனில் தகவல்கொடுங்கள். உடனே கிளம்பி வந்து அவர்களை அள்ளிச்சென்று விடுகிறோம்’ என்று கூறினார்கள்.
அவர் பல நாட்களாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அதிகாலை வரை சி.சி.டி.வி.யையே பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து அந்த கோஷ்டி மூவர் அணியாக தோட்டத்திற்குள் இருந்தபோது சிக்கியிருக்கிறது!
புற நகர் பகுதி கண்காணிப்பு கேமராவுக்கு இப்படிப்பட்ட இன்னொரு ஆபாச முகமும் இருக்குதுங்க! பசங்களை கவனிச்சுக்குங்க!!
- உஷாரு வரும்.

Related Tags :
Next Story