லால்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டித்தள்ளியதில் 35 பேர் காயம்
லால்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித்தள்ளியதில் 35 பேர் காயம் அடைந்தனர்.
லால்குடி,
லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்று லால்குடி கொடிக்கால்தெருவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.
அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி திருச்சி மற்றும் சேலம், மதுரை, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டன. காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதியான காளைகளை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் மட்டுமே காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் கோவிந்தராஜலு தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளர்களுக்கு பரிசுகளை பெற்று கொடுத்தன.
பல காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். சில காளைகள் மைதானத்தில் நீண்டநேரம் நின்று விளையாடின. இதனைப்பார்த்த பார்வையாளர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகள், தன்னை பிடிக்க வந்த வீரர்களுக்கு போக்குகாட்டி அவர்களை முட்டித்தள்ளின. ஜல்லிக்கட்டில் மொத்தம் 771 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை பிடிக்க 600 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு மாலை 3.30 மணி வரை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டித்தள்ளியதில் 35 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 9 பேர் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட பழங்கனாங்குடி ஹரிக்கு முதல் பரிசும், அரியமங்கலம் ராஜசுந்தரத்திற்கு 2-ம் பரிசும், முபாரக் என்பவருக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது. பிடிபடாத மதுரை ராஜசேகர் என்பவரின் மாட்டுக்கு தேக்குகட்டில் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்று பிடிபடாத மாடுகள், காளைகளை பிடித்த வீரர்கள் ஆகியோருக்கு சைக்கிள், பீரோ, நாற்காலி, பிரிட்ஜ், தங்க காசு, வெள்ளிக்காசு, பாத்திரங்கள், குக்கர், ஹெல்மெட் என ரூ.20 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் டி.ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில், போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவரும், வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை திருச்சி மாவட்ட செயலாளருமான காத்தான் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story