காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது நல்லக்கண்ணு பேட்டி
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது என மன்னார்குடியில் நல்லக்கண்ணு கூறினார்.
மன்னார்குடி,
கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மன்னார்குடி வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான மாநாடுகள் நிறைவு பெற்றுள்ளன. கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை மன்னார்குடியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி., நாராயணா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து அகில இந்திய அளவிலான மாநாடு கேரள மாநிலம் கொல்லத்தில் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தின் தண்ணீர் அளவை 14.75 டி.எம்.சி. குறைத்து, கர்நாடகாவிற்கு 4.5 டி.எம்.சி. கூடுதலாக தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதை ஏற்க முடியாது என கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா கூறுவது கோர்ட்டையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் மீறும் செயல் ஆகும். காவிரி பிரச்சினையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் அரசியல் லாப நோக்கத்துடன் செயல்பட்டு வருவது கண்டனத்திற்கு உரியது. இதனை தமிழக அரசு உடனடியாக தட்டிக்கேட்க வேண்டும். காவிரியில் தமிழகத்தின் முழு உரிமையையும் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் ராகவன், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story