நாகையில் தூய்மை விழிப்புணர்வு பேரணி கவர்னர் தொடங்கி வைத்தார்
நாகையில் தூய்மை விழிப்புணர்வு பேரணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக நாகை வந்துள்ளார். நாகையில் உள்ள சுற்றுலா ஆய்வு மாளிகையில் தங்கியிருந்த அவர் நேற்று காலை நாகை அரசு மருத்துவமனைக்கு சென்று தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை துடைப்பம் கொண்டு அகற்றினார். அவருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை கவர்னர் தொடங்கி வைத்து ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து நாகை அவுரிதிடலில் நடந்த தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் “முழு சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி” என்ற தலைப்பில் உறுதிமொழியை ஆங்கிலத்தில் வாசித்தார். பின்னர் மாணவிகளை அழைத்து இதே உறுதிமொழியை தமிழில் வாசிக்கும்படி கவர்னர் கூறினார். மாணவிகளும் ஆர்வத்துடன் உறுதிமொழியை தமிழில் வாசித்தனர்.
அதைத்தொடர்ந்து தூய்மை விழிப்புணர்வு பேரணியை கவர்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேரணி பல்வேறு வீதிகள் வழியாக சென்று காடம்பாடியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழுவினர் தயாரித்த கைவினை பொருட்களின் கண்காட்சி நடந்தது. இதை பார்வையிட்ட கவர்னர் அங்கு, மகளிர் குழுவினர் தயாரித்த புட்டு, கொழுக்கட்டை, பக்கோடா, அடை, முருக்கு, கஞ்சி உள்ளிட்ட உணவு பண்டங்களை சாப்பிட்டார். தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமை கவர்னர் பார்வையிட்டார்.
பின்னர் நாகை அவுரி திடலில் இருந்து காரில் புறப்பட்டு கீழ்வேளூரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரப்பூங்காவிற்கு சென்று கவர்னர் ஆய்வு செய்தார். இதேபோல நாகையில் உள்ள ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரமாக உள்ளதா? என கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சுற்றுலா ஆய்வு மாளிகைக்கு சென்ற கவர்னரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Related Tags :
Next Story