கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உயர் அதிகாரிகள் விசாரணை
பாளையங்கோட்டையில் வாகன சோதனையின்போது மாணவிகள் மீது போலீசார் தண்ணீர் பாட்டிலை வீசியதாக எழுந்த புகார் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகள் ஆனந்தி (வயது 17). அருகில் உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் லவ்லினாஜெனி (17). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் மாலையில் இவர்கள் ஒரு மொபட்டில் ரெட்டியார்பட்டி அருகே 4 வழிச்சாலை பாலத்தின் கீழ் உள்ள ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவிகளை நிற்குமாறு சைகை காட்டியபோது, அவர்கள் மொபட்டை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் தண்ணீர் பாட்டிலை மாணவிகள் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் மாணவிகளின் கட்டுப்பாட்டை இழந்த மொபட் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மாணவிகள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தவறு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 4 வழிச்சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், மாணவிகள் மொபட்டில் வருவதும், அவர்களை போலீசார் மறிப்பதும், அவர்கள் நிற்காமல் சென்று காரில் மோதி விபத்தில் சிக்குவதும், விபத்தில் சிக்கிய மாணவிகளை காப்பாற்ற பொதுமக்களும், போலீசாரும் ஓடி செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் கூறுகையில், ‘பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி அருகே வாகன சோதனையின்போது மொபட்டில் சென்ற மாணவிகள் மீது போலீசார் தண்ணீர் பாட்டிலை வீசியதாக கூறப்படும் புகார் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிந்து, யாராவது தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

Related Tags :
Next Story