கோடை காலம் தொடங்கியதையடுத்து தர்பூசணி, வெள்ளரி வரத்து அதிகரிப்பு
கரூரில் கோடை காலம் தொடங்கியதையடுத்து. தர்பூசணி பழங்கள், வெள்ளரி ஆகியவற்றின் வரத்து அதிகரித்துள்ளது.
கரூர்,
கரூரில் பனி காலம் முடிந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. கோடை காலத்தில் கரூரில் தினமும் சராசரியாக 100 டிகிரி வெயிலின் அளவு இருக்கும். அக்னி நட்சத்திரம் காலங்களில் வெயிலின் உக்கிரம் கரூரில் மிக அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது வெயிலின் தாக்கம் லேசாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் வெயில் அடிக்க தொடங்கியதன் விளைவாக தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வரத்தொடங்கி விட்டன. சாலையில் ஆங்காங்கே தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழ கடைகளிலும் தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கும், வெட்டப்பட்ட தர்பூசணி துண்டுகள் கொண்ட ஒரு தட்டு ரூ.10-க்கும் விற்பனையாகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிடுவதை காணமுடிகிறது.
இதேபோல வெள்ளரி பிஞ்சுகள் வரத்தும் அதிகரித்துள்ளது. பரமத்தி வேலூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளரி பிஞ்சு வரத்து காணப்படுகிறது. சாலையோரம் தள்ளுவண்டிகளில் வெள்ளரி பிஞ்சுகளின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒரு வெள்ளரி பிஞ்சு ரூ.10 முதல் விற்பனையாகிறது. வெயிலின் கொடுமையால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் வாங்கி சாப்பிட தொடங்கி உள்ளனர்.

Related Tags :
Next Story