ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி


ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Feb 2018 3:15 AM IST (Updated: 19 Feb 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஊத்துக்கோட்டை,

விழுப்புரம் மாவட்டம் வீராணன் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 48). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி தவச்செல்வி. இவர்கள் இருவரும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியவண்ணான்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டினர்.

வெட்டிய கரும்பை சிவானந்தம் டிராக்டரில் ஏற்றி ஓட்டி வந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தோட்டத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சிவானந்தம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தவச்செல்வி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story