மோடி சொல்லித்தான் அமைச்சரவையில் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் கூறி உள்ளார் - தா.பாண்டியன் பேட்டி
பிரதமர் மோடி சொல்லித்தான் அமைச்சரவையில் இணைந்தேன் என ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் கூறியுள்ளார் என்று தா.பாண்டியன் கூறினார்.
கோவை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கவலையளிக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை குறை கூற விரும்பவில்லை. கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தவில்லை. காவிரியில் தண்ணீர்விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் கர்நாடகம் அதனை நிறைவேற்றவில்லை. எனவே இந்த தீர்ப்பை 15 ஆண்டுகள் மேல்முறையீடு செய்யக்கூடாது என்பது கருத்துருவா அல்லது கண்டிப்பான உத்தரவா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ என்று கூறும் பிரதமர் மோடி, காவிரியில் தமிழகத்துக்கு விடப்படும் தண்ணீரின் டி.எம்.சி. அளவை கணினி மூலம் கண்காணிக்கவும், டெல்லியில் இருந்து இதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்துக்கு ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட வேண்டும்.
காவிரி நதிநீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனில் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். காவிரி பிரச்சினை தமிழகத்தின் வாழ்வாதாரபிரச்சினை. தமிழ்நாட்டில் தஞ்சை டெல்டா பகுதியில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழக நலன் காக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழகத்தில் பயங்கரவாதம் உள்ளது என்றால் அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மோடி சொல்லித்தான் அமைச்சரவையில் இணைந்தேன்’ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து கூறி உள்ளது குறித்து, நிருபர்கள் கேட்டதற்கு, ‘ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் சொல்லி உள்ளார்’ என்று கூறினார்.
‘இந்த விவகாரத்தில் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தார்’ என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்து குறித்து கேட்டதற்கு, தா.பாண்டியன் பதில் அளிக்கும் போது, ‘உலக அளவில் மோடி கட்ட பஞ்சாயத்துதான் செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறினார்.

Related Tags :
Next Story