ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு இல்லை; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இருவரும் இணைந்தே செயல்படுகிறோம் என்று கோவையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-ந்தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள்தான் சிறு பிரச்சினைகளையும் பெரிதுபடுத்துகிறது. இருவரும் இணைந்து கட்சியை மென்மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறோம்.
தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக கருத்து தெரிவித்திருப்பது குறித்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம்தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக அரசை அவர் விமர்சிப்பது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளது. ஆனால் கொள்கை அளவில் இரு அரசுகளுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.
நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதால் எங்கள் இயக்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்தார். அவர் தனது உழைப்பில் சம்பாதித்த பணத்தை பொதுமக்களுக்கு வாரி, வாரி வழங்கினார்.
அவர் கண்ட கனவை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நனவாக்கி சென்றார். இந்தியாவிலேயே அதிக திட்டங்கள் கொண்டு வந்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். அவரின் ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்ட காரணத்தினால்தான் 32 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் காவிரி நீர் பிரச்சினை குறித்து குறிப்பிடும் போது தமிழக அரசு காவிரி நதிநீர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்றும், சுப்ரீம்கோர்ட்டில் சரியாக வாதிடவில்லை என்றும் கூறியுள்ளனர். இதுவடிகட்டின பொய்.
தற்போது தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைக்கு தி.மு.க. தான் காரணம். கடந்த 1974-ம் ஆண்டு காவிரி தொடர்பான ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. இதனை புதுப்பிக்காத காரணத்தினால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்து இருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்காது. அதேபோல் கபினி அணையை கர்நாடகா அரசு கட்டியபோது அதனை அப்போதைய தமிழக அரசு சட்ட ரீதியாக சந்தித்து இருந்தால் தடுத்து இருக்கலாம். இப்போது எங்கள் மீது அவர்கள் பழி சுமத்தி கொண்டு இருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் 13 நாட்கள் தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் திறமையாக வாதாடினர். நமது வாதங்கள் முழுமையாக எடுத்து வைக்கப்பட்டது. அந்த வாதங்கள் அடிப்படையில்தான் இந்த தீர்ப்பில் பல்வேறு வரவேற்க தக்க அம்சங்கள் இடம்பெற்றுருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story