கமுதியில் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி
கமுதியில் குடிபோதையில் தகராறு செய்தது கொலை மிரட்டல் விடுத்த கணவரை அவருடைய மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
கமுதி,
கமுதி அருகே பெருநாழி போலீஸ் சரகம் கொண்டுநல்லான்பட்டியை சேர்ந்த சிதம்பரம் என்பவருடைய மகன் சின்னத்துரை (வயது45). இவருடைய மனைவி சண்முகத்தாய் (43). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சின்னத்துரை குடிபோதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சின்னத்துரை மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர், பணம் தரமறுத்ததால் சின்னத்துரை கொலை செய்துவிடுவதாக கூறி அரிவாளை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சண்முகத்தாய் அரிவாளை பறித்து கணவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் வழக்குப்பதிவு சண்முகத்தாயை கைது செய்தனர்.

Related Tags :
Next Story