மண் ரோடான சிங்கம்புணரி-மு.சூரக்குடி சாலை, வாகன ஓட்டிகள் அவதி
சிங்கம்புணரி- மு.சூரக்குடி சாலை மண் ரோடாக காட்சியளிப்ப தால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வழியாக காரைக்குடி-திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலைக்கு மாற்றுச் சாலையாக சிங்கம்புணரியில் இருந்து கிராமப்புறமாக அரசினம்பட்டி வழியாக மு.சூரக்குடிக்கு சாலை உள்ளது. இந்த சாலையில் அரசினம்பட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. மேலும் இந்த சாலை முறையூர் வழியாக சென்று மீண்டும் திண்டுக்கல்-காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ள மருதிப்பட்டியுடன் இணையும். சிங்கம்புணரியில் இருந்து மெயின் ரோட்டில் எஸ்.வி.மங்கலம், காளாப்பூர் செல்லாமல் மு.சூரக்குடி வழியாக மருதிப்பட்டி சென்று திண்டுக்கல் செல்ல இந்த சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர அரசினம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிங்கம்புணரி செல்லவும், மருதிப்பட்டி செல்வதற்கு இந்த சாலை முக்கியமானதாக உள்ளது. மேலும் சிங்கம்புணரி அருகே கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செகுட்டு அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கும் இந்த சாலையே பிரதானமாக உள்ளது.
ஆனால் இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி தற்போது மண் ரோடாக காட்சியளிக்கிறது. இந்த சாலை குறுகலாக இருப்பதால் ஒரே நேரத்தில் இருபுறமும் பஸ்கள் வந்தால் ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மோசமான சாலைகளால் இருசக்கர வாகனம், பஸ், லாரி உள்ளிட்டவை அடிக்கடி பஞ்சராகி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மண் ரோடான இந்த சாலையில் அவசர தேவைக்கு அழைத்தால் கூட ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வர மறுக்கின்றன. எனவே சேதமடைந்த சிங்கம்புணரி-மு.சூரக்குடி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அரசினம்பட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, சூரக்குடி, முறையூர், முத்துசாமிபட்டி, செமினிபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story