பேராவூரணியில் மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
பேராவூரணியில் மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கடந்த 3-ந் தேதி மாதர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று பேராவூரணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கடையை அகற்றும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆறு.நீலகண்டன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருப்பையன், குமாரசாமி, வேலுச்சாமி, ரெங்கசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ராசமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைத்து இந்திய ஜனநாயக மாதர்சங்க நிர்வாகி ஒன்றிய செயலாளர் இந்துமதி கலந்து கொண்டு பேசினார். இதில் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story