மாணவர்களுக்கு இலக்கணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


மாணவர்களுக்கு இலக்கணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2018 4:15 AM IST (Updated: 19 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

தவறான உதாரணங் களை ஆசிரியர்கள் மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு இலக்கணமாக திகழ வேண்டும் என செய்யாறு அருகே குண்ணத்தூரில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேசினார்.

செய்யாறு,

செய்யாறு தாலுகா குண்ணத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 90-வது ஆண்டு விழா நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், செய்யாறு உதவி கலெக்டர் பி.கிருபானந்தன், மாவட்ட கல்வி அலுவலர் கே.கிருபானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சா.சரவணன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ந.கிருபாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளது வேதனை அளிக்கிறது. கல்வியால் தான் முன்னேற்றம் அடைய முடியும். தலைமை சரியாக இருந்தால் நாடாக இருந் தாலும் சரி, மாநிலமாக இருந் தாலும் சரி, மாவட்டமாக இருந்தாலும் சரி நன்றாக இருக்கும். தற்போது சரியான தலைமை இருப்பதால் தான் கல்வியில் மாவட்டம் முன்னேற்ற பாதையில் செல்கிறது.

அப்போதைய ஆசிரியர்கள் இலக்கணமாக இருந்ததால் தான் கல்வியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது. எனவே இப்போதைய ஆசிரியர்களும் மாணவர் களுக்கு இலக்கணமாக மாற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் பிரம்மாக்கள்.

கிராமத்தில் இருக்கும் ஆசிரியர்கள் துரோணாச் சாரியார் போல மாணவர் களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். பள்ளிக்கு உரிய நேரத்தில் வரவேண்டும், ஆசிரியர்கள் குடித்துவிட்டு வந்தால் மாணவன் என்ன செய்வான். ஆசிரியர்களிடம் தவறான உதாரணங்கள் பல இருக்கின்றன. அவை மாற வேண்டும்.

பெற்றோர்களை விட ஆசிரியர்களிடம் தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே மாணவர்களை ஆசிரியர்கள் தங்களின் குழந்தை போல நினைத்து அவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளை களுக்கு பணிவு, பாசம், மரியாதை ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். அண்ணன், தம்பி இடையே விட்டுக்கொடுத்து மகிழ்ச்சி யாக இருந்தால் அந்த குடும்பத்தின் பிள்ளைகள் நல்ல மனநிலையில் நன்றாக இருக்கும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தை களுக்கு இன்பம், துன்பம், இனிப்பு, கசப்பு ஆகியவற்றை கற்றுத் தர வேண்டும்.

மகிழ்ச்சியை மட்டுமே கற்றுக்கொடுத்து துன்பத்தை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாததால் தான் தற்கொலைக்கு செல்கின்றனர். எந்தவொரு சூழ்நிலையும் எதிர்கொள்ளும் மனநிலையை பெற்றோர்கள் கற்று கொடுக்க வேண்டும்.

கிராமப்புறத்தில் ஊதியத் திற்கு ஏற்ப ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். மாணவர் கள் கல்வி அறிவோடு பொது அறிவையும் தனித்திறன் களையும் வளர்த் துக் கொள்ள வேண்டும். தமிழ் அறிவு அடிப்படையானது. தமிழகத்தை தாண்டி உலகளவில் செல்ல ஆங்கில அறிவு மிகவும் அவசியம்.

உங்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக் காதீர்கள், பிள்ளைகளுக்கு எந்த அறிவில் ஆர்வமுள்ளதோ அதை கற்றுக்கொடுக்க வேண்டும். தொலைக் காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். ஆங்கில செய்திகளை பார்த்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் திறனை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தியா வில் தமிழகத்தில் தான் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. பட்டம் மட்டும் இருந்தால் போதாது. வேலை வாய்ப்புக்கு ஏற்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

படிப்பும், மற்றவர்களை அனுசரித்து போகும் திறனும் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். உங்கள் பெற்றோர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க நன்கு படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் வி.ராஜசேகரன் (பொறுப்பு), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பி.ராஜேந்திரன், பள்ளி துணைஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Next Story