செய்யாறில் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
செய்யாறில் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதியில் கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு செய்தார்.
செய்யாறு,
செய்யாறில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தங்கும் விடுதி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், வழங்கப்படும் உணவில் சுகாதாரம் இல்லை எனவும் புகார்கள் வந்தன.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பள்ளி மாணவிகள் தங்கும் விடுதிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பள்ளி மாணவிகளிடம் விடுதியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சமையல் அறைக்கு சென்று ருசித்து பார்த்தார். சமையலர் மற்றும் பாதுகாவலரிடம் விடுதியினை தூய்மையாகவும், சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை செய்தார்.
அதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிக்கு சென்று பார்வையிட்டு கல்லூரி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து கழிப்பறை, சமையல் அறை என அனைத்து பகுதியிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பயன்பாட்டில் இல்லாத செய்யாறு மினி விளையாட்டு மைதானத்தையும், மோரணத்தில் நடக்கும் கிராமப்புற சாலை அமைக்கும் பணி, செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடு, தொகுப்பு வீடு திட்டத்தில் மேற்கொண்டு வரும் கட்டிடப்பணிகளை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார். பணிகள் துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

Related Tags :
Next Story