வேலூர், ஆற்காடு, அரக்கோணம் கோர்ட்டு கட்டிட பணிகள் ஐகோர்ட்டு நீதிபதி அடிக்கல் நாட்டினார்


வேலூர், ஆற்காடு, அரக்கோணம் கோர்ட்டு கட்டிட பணிகள் ஐகோர்ட்டு நீதிபதி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 19 Feb 2018 4:00 AM IST (Updated: 19 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர், ஆற்காடு, அரக்கோணம் கோர்ட்டு கட்டிட பணிகளுக்கு ஐகோர்ட்டு நீதிபதி சுப்பையா அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ஆற்காட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டு கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடம், அரக்கோணத்தில் சார்பு நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, வேலூரில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடம் மற்றும் புதிய கோர்ட்டு கட்டிடம் ஆகியவற்றிற்கான இணைப்பு பாலம் ஆகிய கட்டிட பணிகள் ரூ.9 கோடியே 20 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் தொடங்க உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி வரவேற்றார். பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பிரேம்சந்தர் கட்டிட பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுப்பையா கோர்ட்டு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அனிதாசுமந்த், முரளிதரன், டீக்காராமன், தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பேசினர்.

கலெக்டர் ராமன் மற்றும் ஆற்காடு, அரக்கோணம், வேலூர் ஆகிய இடங்களில் கோர்ட்டுகளில் உள்ள பார் அசோசியேசன் தலைவர்கள் வாழ்த்தி பேசினர்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன், சு.ரவி எம்.எல்.ஏ. மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் வக்கீல்கள், அரசு வக்கீல்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ராஜூ நன்றி கூறினார்.

ஆற்காட்டில் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு மற்றும் நீதிபதி குடியிருப்பு ஆகியவை ரூ.4 கோடியே 28 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சி ஆற்காடு - செய்யாறு சாலையில் நடைபெற்றது. ஆற்காடு குற்றவியல் கோர்ட்டு நீதிபதி பிரபா தாமஸ் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், ஆற்காடு வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சுரேஷ், செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story