கோவில் கட்டுவது தொடர்பாக மோதல் கத்திக்குத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் சாவு; விவசாயி கைது


கோவில் கட்டுவது தொடர்பாக மோதல் கத்திக்குத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் சாவு; விவசாயி கைது
x
தினத்தந்தி 19 Feb 2018 10:30 PM GMT (Updated: 19 Feb 2018 7:05 PM GMT)

நயினார்கோவில் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் பலியானார்.இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர். வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் சிறுவயல் கிராமத்தில் கோவில் கட்டுவது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக மீண்டும் ஏற்பட்ட மோதலில் முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி (வயது 55) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செந்தமிழ்செல்வன்(22), அவருடைய தந்தை விவசாயியான வேலு(55), அருமைதுரை, அவருடைய மகன் ரமேஷ் ஆகிய 4 பேர் மீது நயினார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விவசாயி வேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தலை மறைவாக இருந்த செந்தமிழ்செல்வன் நேற்று திருவாடானை கோர்ட்டில் சரண் அடைந்தார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

Next Story