மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க வேண்டும் + "||" + The Tiruchirappalli-Chennai Express train will run via Tiruvarur

திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க வேண்டும்

திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க வேண்டும்
திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர்் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்் பாஸ் கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் இணை செயலாளர்கள் அழகிரிசாமி, பாண்டுரங்கன், துணை பொருளாளர்் தணிகாசலம் நிர்வாகிகள் நாகராஜன், கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


திருவாரூர்் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் வருகிற (மார்்ச்) 1-ந் தேதி முதல் மன்னார்்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சேவை சங்கத்தினர் மற்றும் பொதுமக்களை திரட்டி சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்பது.

திருவாரூர் பகுதியில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்வதற்கு ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அதே போல சென்னை செல்ல பகல் நேரத்தில் ரெயில் வசதியும் கிடையாது. இதனை போக்கிட திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க வேண்டும்.மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மயிலாடுதுறை-திருநெல்வேலி ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரெயில்களை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் 3 ரெயில்களையும் திருவாரூர் வழியாக காரைக்கால், வேளாங்கண்ணி மற்றும் தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.