நின்ற பஸ் மீது வேன் மோதல்; 13 பேர் படுகாயம்
திருச்செந்தூரில், நின்று கொண்டிருந்த பஸ் மீது வேன் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலில் சிறுமிக்கு முடிகாணிக்கை செலுத்திவிட்டு ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 27). இவருடைய மனைவி பேபி சந்திரா (25). இவர்களுடைய மகள் வினோதினி (3). இவளுக்கு திருச்செந்தூர் கோவிலில் முடிகாணிக்கை செலுத்துவதற்காக, நேற்று காலையில் பொன்ராஜ் தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் வேனில் திருச்செந்தூருக்கு வந்தார். சிறுமிக்கு முடிகாணிக்கை செலுத்திவிட்டு, மாலையில் அனைவரும் வேனில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
திருச்செந்தூர்- பாளையங்கோட்டை ரோட்டில் குமாரபுரம் பகுதியில் சென்றபோது, அங்கு சாலையோரம் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த ஆறுமுககனி (36), ருக்மணி (14), வசந்த் (18), எபிஷா (30), பவானி (22), பேச்சியம்மாள் (50), லட்சுமி (21), பஞ்சவர்ணம் (60), மீனா (21), ராஜரத்தினம் (38), கண்ணம்மாள் (50), ராணி (50), ஜோதி (21) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக திருச்செந்தார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த கண்ணம்மாள், ராணி, ஜோதி, லட்சுமி ஆகிய 4 பேரையும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story