சீராக குடிநீர் வழங்கக்கோரி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சீராக குடிநீர் வழங்கக்கோரி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி ஊராட்சிக்கு உள்பட்டது சோளகர் தொட்டி கிராமம். இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். விவசாய கூலி தொழிலை நம்பி சோளகர் தொட்டி கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை திடீரென காலிக்குடங்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தார்கள். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அதிகாரி அழகேசன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, ‘ஆழ்குழாய் கிணறு மூலமாக சோளர் தொட்டி கிராமத்துக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு வற்றிவிட்டது. இதனால் எங்கள் கிராமத்துக்கு சீராக குடிநீர் வருவதில்லை. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீரின்றி அவதிப்படுகிறோம்.
இதுகுறித்து நாங்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் குடிநீருக்காக தினமும் 2 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்து பகுதிக்கு சென்று எடுத்து வருகிறோம். அந்த தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை. குடிநீர் பிரச்சினை எங்களை மட்டுமின்றி, இங்குள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கபள்ளியில் படிக்கும் மாணவர்களையும் பாதித்துள்ளது. குடிநீர் கிடைக்காமல் அவர்களும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனே சோளகர்தொட்டி கிராமத்துக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.
அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அழகேசன் கூறும்போது, ‘விரைவில் உங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து தருகிறோம்.’ என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story