உறுதியான ஜெல் செங்கல்


உறுதியான ஜெல் செங்கல்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:14 AM GMT (Updated: 20 Feb 2018 10:14 AM GMT)

புதுமையான ஜெல் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ட்டுமானங்களின் உறுதித்தன்மைக்கு கைகொடுக்கும் வகையில் புதுமையான ஜெல் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக காப்புத் திறன் கொண்டது இந்த செங்கல். வழக்கமான ஹாலோபிளாக் செங்கல்கள்போல இடைவெளியுடன் உருவாக்கப்படும் செங்கல்களில் அந்த இடைவெளியை ‘ஏரோஜெல் பேஸ்ட்’ எனும் கலவையால் நிரப்பி இந்த செங்கல் தயாரிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவான எம்பா, இந்த புதுமை செங்கல்களை உருவாக்கி இருக்கிறது. இது வழக்கமான செங்கலுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் திடத்தன்மையுடனும், எடை குறைவானதாகவும் உள்ளது. ஆனால் வழக்கமான செங்கல்களைவிட 8 மடங்கு அதிகமாக வெப்பத்தை தாங்கும். உறுதித்தன்மையும் 6.5 மடங்கு அதிகமாகும். அதாவது தடிமன் குறைவான சுவரை எழுப்பினாலே அதிக திறனுடன் பாரத்தை தாங்கி நிற்கக்கூடியது. விரிசல், வெப்பம், சரிவு ஆகியவற்றையும் தாங்கும்.

இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்டிருந்தாலும் இந்த ஜெல் செங்கல்களை உருவாக்க அதிக செலவு பிடிக்கும். ஒரு சதுர மீட்டர் கனஅளவுள்ள சுவரை உருவாக்க 33 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம். அதிகரிக்கும் இதன் பயன்பாடு எதிர்காலத்தில் விலையை குறைக்கும். உறுதித்தன்மையால் இந்த செங்கல்களின் பயன்பாடு பெருகும் என்று நம்பலாம்.

Next Story