சிறுத்தைப்புலியை கொன்றவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்
தாக்க வந்த சிறுத்தைப்புலியை கொன்ற விவசாயி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே தாக்க வந்த போது சிறுத்தைப் புலியை வெட்டிக் கொன்ற விவசாயி ராமமூர்த்தி, காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவரது உடல் நலம் குறித்து கேட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் விவசாயிகள் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. வன விலங்குகளால் கால்நடைகளும், விவசாயிகளும் தாக்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு தாக்கப்பட்ட கால்நடைகளுக்கோ, விவசாயிகளுக்கோ அரசு உரிய இழப்பீடோ, நிவாரணமோ, பாதுகாப்போ வழங்குவதில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர எல்லையில் உள்ள மகாராஜகடை அருகே விவசாய பண்ணையில் உள்ள ஆடு, மாடுகளை கொல்ல வந்த சிறுத்தைப்புலியை விவசாயி ராமமூர்த்தி விரட்டிய போது, அவரை தாக்க வந்ததால், அவர் தன்னை தற்காத்துக்கொள்ள அரிவாளால் தாக்கிய போது, சிறுத்தைப்புலி இறந்துவிட்டது. சிறுத்தைப்புலி தாக்கிய சம்பவத்தால் காயம் அடைந்த அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் வன விலங்கை வெட்டி கொன்றதாக விவசாயி ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். தன்னை தாக்க வந்த சிறுத்தையிடம் போராடி, அதை கொன்ற விவசாயி ராமமூர்த்திக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Related Tags :
Next Story