சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரிசி, முட்டையுடன் வந்து கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு
சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சியினர் அரிசி, முட்டையுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூஷ்ணாதேவி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) சேதுராமன், துணை ஆட்சியர்கள் கணேஷ், ஜெகதீஸ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராமு உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், குள்ளஞ்சாவடி ரெயில்வே கேட் சாலை முதல் வெள்ளக்கரை சாலை வரை 7½ கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 400 டிராக்டர்கள் கரும்பு லோடு ஏற்றிச்செல்கிறது. சாலையும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகவே இந்த சாலையை சீரமைப்பதோடு, சாலையையும் அகலமாக போட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக தட்டில் அரிசி, முட்டையுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 210 மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். ஆனால் 460 பேர் சத்துணவு சாப்பிடுவதாக தவறாக கணக்கு எழுதி, அந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டை, துவரம் பருப்பு, கொண்டை கடலை, பாசிப்பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை சத்துணவு அமைப்பாளர், அரசு அதிகாரிகளின் ஆதரவோடு வீதிகளிலும், கடைகளிலும் விற்பனை செய்கிறார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். லாரி போன்ற சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அளித்து விட்டு சென்றனர்.

Related Tags :
Next Story