புஞ்சைபுளியம்பட்டி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது செங்கோட்டையன் நகர். இங்கு 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு பவானிசாகர் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குழாய் வழியாக காராப்பாடிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து மேல்நிலை தொட்டியில் ஏற்றி, பின்னர் செங்கோட்டையன் நகர் பகுதி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இதேபோல் செங்கோட்டையன் நகரில் ஆழ்குழாயும் அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 நாட்களாக ஆழ்குழாய் தண்ணீர் வற்றிவிட்டது. அதற்காக பொருத்தப்பட்ட மோட்டாரும் பழுதாகிவிட்டதாக தெரிகிறது. மேலும் பவானிசாகர் கூட்டுகுடிநீர் திட்ட தண்ணீரும் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் செங்கோட்டையன் நகர் பகுதியை சேர்ந்த 75 பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட கிராமமக்கள் நேற்று காலை 8½ மணி அளவில் பாறைபுதூர் பஸ்நிறுத்தத்தில் ஒன்று திரண்டார்கள். பின்னர் நம்பியூர் செல்லும் சாலையில் அமர்ந்து காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் குறித்து தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீசாரும், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரவிச்சந்திரன் கிராமமக்களிடம், விரைவில் பவானிசாகர் கூட்டுகுடிநீர் திட்ட தண்ணீர் வழங்கவும், பழதடைந்த ஆழ்குழாய் மோட்டாரை பழுதுபார்க்கவும், புதிய ஆழ்குழாய் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்டு போராட்டக்காரர்கள் காலை 10½ மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story