பதவி உயர்வு வழங்கக்கோரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம்


பதவி உயர்வு வழங்கக்கோரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2018 4:15 AM IST (Updated: 21 Feb 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வு வழங்கக்கோரி பொதுப்பணித்துறை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பல்நோக்கு ஊழியர்கள் பதவி உயர்வு வழங்கக்கோரி கடந்த 2 நாட்களாக தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் நேற்று கல்வித்தகுதி பெற்ற பல்நோக்கு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசிதழில் வெளியிடப்பட்ட நியமன விதிப்படி பணி ஆய்வாளர் மற்றும் மெக்கானிக் காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட கோப்புகளை எந்தவித காரணமும் இல்லாமல் துறை செயலாளரின் அனுமதி இல்லாமல் திரும்ப பெற்றதை கண்டித்து தலைமை பொறியாளர் அலுவலகத்தை பல்நோக்கு ஊழியர்கள் முற்றுகையிட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

போராட்டத்துக்கு பல்நோக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முரளி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story