க.பரமத்தி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
க.பரமத்தி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிவடைந்து.
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் பாதையும், உயர் மின் கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் எனவும், அதில் கலந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்திருந்தார். அதன்படி கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதற்கிடையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையிலும் விவசாயிகள் பலர் திரண்டு வந்தனர். இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட விவசாயிகளை மட்டுமே அழைத்து பேச முடியும் என உதவி கலெக்டர் சரவணமூர்த்தி தெரிவித்தார். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தால் அதனை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இதைதொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்தனர். அதற்கு உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கோரிக்கைகள் தொடர்பாகவும் மனுவாக எழுதி கொடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதில் “மின்பாதைகளை கேபிள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும். இதுவரை கையகப்படுத்திய நிலத்திற்கு சந்தை மதிப்பில் நான்கு மடங்கு வழங்க வேண்டும்.
விவசாயம் செய்திருந்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர் கோபுரங்கள், மின் பாதைகளால் விவசாயம் பாதிப்படையும். எனவே சாலை ஓரமாக கேபிள் மூலம் மின் பாதை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். விவசாயிகளின் கருத்துக்களை கலெக்டரிடம் தெரிவிப்பதாக உதவி கலெக்டர் சரவணமூர்த்தி தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து உதவி கலெக்டர் சரவணமூர்த்தி கூறுகையில், “மத்திய, மாநில அரசுகள் மூலம் உயர் கோபுரங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் தாராபுரம் அருகே உள்ள புகளூரில் இருந்து வேலூர் அருகே திருவலம் வரைக்கும், புகளூர் முதல் க.பரமத்தி வரைக்கும் உள்ள மின்பாதைகளில் உயர் மின்கோபுரங்கள், உயர் மின் பாதைகள் அமைக்கப்படுகிறது. இதில் க.பரமத்தி பகுதியில் உயர் மின்கோபுரங்கள், மின் பாதைகள் அமைக்க 7 விவசாயிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களது நிலத்திற்கு உரிய விலை தர அரசு நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்” என்றார்.
விவசாயிகள் கூறுகையில், “இத்திட்டம் குறித்து முழுமையான எந்த அறிவிப்பும் இல்லை. மின்பாதை எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. நகர்புற பகுதிகளில் மட்டும் மின்பாதைகள் கேபிள் மூலம் அமைக்கப்படுகிறது. கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் அதுபோல சாலையோரம் கேபிள் மூலம் மின் பாதை அமைக்க வேண்டும்” என்றனர். உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் எந்தவித சுமூக முடிவும் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. மின்சார வாரிய அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story