மாநகராட்சி அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயற்சி
பெங்களூருவில், போலி ஆவணங்களை வாங்க மறுத்ததால் ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற வழக்கில் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு சாந்திநகர் எம்.எல்.ஏ. என்.ஏ.ஹாரீசின் மகன் முகமது ஹாரீஸ் நலபட் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனியார் ஓட்டலில் வைத்து வித்வத் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பெங்களூரு உரமாவு பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூரு உரமாவு பகுதியில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி வருவாய் அதிகாரியாக செங்கல்ராயப்பா பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அலுவலகத்தில் செங்கல்ராயப்பா பணியில் இருந்தபோது, காங்கிரஸ் பிரமுகரும், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய உறுப்பினருமான நாராயணசாமி அங்கு சென்று அவரிடம் ஆக்ரோஷமாக பேசியதுடன், நிலம் தொடர்பான ஆவணங்களை ஏன் வாங்க மறுத்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் பெட்ரோலை ஊற்றி அலுவலகத்தை தீவைக்க முயன்றுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று தனியார் தொலைக்காட்சிகளில் வெளியானதோடு, சமூக வலைத்தளங்களிலும் ‘வைரலாக‘ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறிந்த முதல்-மந்திரி சித்தராமையா, மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாரை தொடர்பு கொண்டு ‘தவறு செய்தவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள்’ என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, மாநகராட்சி அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்க முயன்றதாக ராமமூர்த்தி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதை அறிந்த நாராயணசாமி தலைமறைவானார். அவரை கைது செய்ய கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அஜய் ஹிலோரி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நாராயணசாமியை வலைவீசி தேடிவருகிறார்கள்.
சம்பவம் குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது, என்.ஆர்.ஐ. லே-அவுட்டில் உள்ள ஒரு நிலப்பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்கு கோர்ட்டில் இருப்பதாகவும், இந்த நிலம் தொடர்பாக சில போலி ஆவணங்களை உதவி வருவாய் அதிகாரி செங்கல்ராயப்பாவிடம் கொடுத்து கையெழுத்து போடும்படி நாராயணசாமி வலியுறுத்தியதும் தெரியவந்தது. ஆனால் செங்கல்ராயப்பா அந்த ஆவணங்களை வாங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நாராயணசாமி பெட்ரோல் ஊற்றி அலுவலகத்துக்கு தீவைக்க முயன்றதும், சம்பவம் குறித்து புகார் அளிக்க கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
அத்துடன், தலைமறைவாக உள்ள நாராயணசாமி கே.ஆர்.புரம் பிளாக் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்பதும், கே.ஆர்.புரம் எம்.எல்.ஏ. பைரதி பசவராஜின் நெருங்கிய ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. மேலும், நாராயணசாமியின் செயலை தொடர்ந்து உரமாவு மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த உதவி வருவாய் அதிகாரி செங்கல்ராயப்பா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், மகாதேவபுராவில் உள்ள மாநகராட்சியின் இணை கமிஷனர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய உறுப்பினர் பதவியில் இருந்தும் நாராயணசாமி நீக்கப்பட்டார். மேலும், கட்சியில் இருந்து நாராயணசாமியை 6 ஆண்டுகள் நீக்கி கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story