இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி திருமருகல், கீழ்வேளூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சி ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி நீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை 14.75 டி.எம்.சி. குறைத்து வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு டெல்டா மாவட்டம் பாலைவனமாகவும் மாறும் அபாயம் உள்ளது.
எனவே சுப்ரீம் கோர்ட்டு காவிரி நீர் வழக்கில் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் பழனிவேல், நிர்வாகிகள் ராமதாஸ், வரதராஜன், அசோகன், அன்பழகன், காளிதாஸ் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கீழ்வேளூர் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 14.75 டி.எம்.சி. குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு டெல்டா மாவட்டம் பாலைவனமாகவும் மாறும் அபாய நிலை உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு காவிரி நீர் வழக்கில் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் காசிநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர துணை செயலாளர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story