தாமிரபரணியை சீரமைக்க மக்களும், அரசும் இணைந்து செயல்படவேண்டும் நதிகள் மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் ஸ்ரீராம்வேதிரே பேச்சு
தாமிரபரணியை சீரமைக்க மக்களும், அரசும் இணைந்து செயல்படவேண்டும் என்று நெல்லையில் நடந்த கருத்தரங்கில் மத்திய அரசு நீர் நிர்வாகம் நதிகள் மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் ஸ்ரீராம்வேதிரே கூறினார்.
நெல்லை,

கருத்தரங்கம்
தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் நீர் நிர்வாகம் மற்றும் நதிகள் மேம்பாட்டு ஆலோசகர் ஸ்ரீராம்வேதிரே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
குளிர்பான கம்பெனிகளுக்கு
தமிழகத்தில் ஓடுகின்ற வற்றாத ஜீவநதியாக இருப்பது தாமிரபரணிநதி மட்டும் தான் உள்ளது. தாமிரபரணி ஆறு தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கின்ற நதியாகவும் உள்ளது. இந்த நதி புண்ணியநதியாகும். ஆனால் தாமிரபரணி ஆறு தற்போது மாசுபடுத்தப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள மக்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருந்து வருகிறது. ஆனால் வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் வீடுகளில் உள்ள கழிவுகள், பாதாளசாக்கடை கழிவுகள், தொழிற்சாலைகளின் கழிவு அதிக அளவில் கலப்பதால் ஆறு மாசுபட்டு வருகிறது. கோடைக்காலங்களில் சாக்கடை நீர் அதிக அளவில் செல்லக்கூடிய நிலை உள்ளது. நமது ஆற்றை நாம் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. மக்களிடையே ஆற்றை தூய்மையாக வைத்திருக்கவேண்டியது நமது கடமை என்ற உணர்வு ஏற்படவேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதாலும், தொழிற்சாலைகளுக்கும், குளிர்பான நிறுவனங்களுக்கும் தண்ணீர் வழங்குவதாலும் இன்னும் 10 அல்லது 5 ஆண்டுகளில் இந்த ஆற்றிற்கு பெரும் ஆபத்து அதாவது அழிவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதை நாம் உணர்ந்து அதை பாதுகாக்கவேண்டும்.
மக்களுக்கு பொறுப்பு
கங்கை நதி மாசுபடும்போது அதை நாம் தடுக்காததால் தற்போது அதை சீரமைக்க பல கோடி செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அது போன்ற நிலை தாமிரபரணிக்கு வரும் எனவே தாமிரபரணி ஆற்றை சுத்தமாக வைத்து கொள்ளவும், பாதுகாக்கவும், சீரமைக்கவும் மக்கள் தங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து அரசும் இணைந்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story