போலீசார் பொருத்திய கண்காணிப்பு கேமரா திருட்டு


போலீசார் பொருத்திய கண்காணிப்பு கேமரா திருட்டு
x
தினத்தந்தி 22 Feb 2018 3:00 AM IST (Updated: 21 Feb 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே போலீசார் பொருத்திய கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்று உள்ளனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாழவச்சனூர் தென்பெண்ணை ஆற்றுப் பாலம் சோதனை சாவடி அருகில் கடந்த ஆண்டு போலீசார் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தினர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் அந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story