திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கபாதை அமைக்க வேண்டும்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் ரெயில் நிலையம் உள்ளது. சென்னை சென்டிரல், அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் இந்த ரெயில்நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறிப்பிட்ட சில ரெயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கிறது. திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கடந்து செல்ல ஏதுவாக ரெயில்வே சுரங்கப்பாதை எதுவும் அமைக்கப்படவில்லை.
இதனால் ரெயில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் மோதி அவர்கள் மரணம் அடையும் சம்பவமும் நடந்து வருகிறது.
ரெயில் பயணிகளுக்கு ஏதுவாக திருவள்ளூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். திருவள்ளூர் ரெயில் நிலையத்தை ஏ1 கிரேடாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திருவள்ளூர் ரெயில் பயணிகள் சங்கத்தினரும், ரெயில்பயணிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் ரெயில்வே துறையினர் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்தில் பயணிகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story