மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும், தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும், தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:15 AM IST (Updated: 22 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று தெற்கு மாநில தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை லப்போர்த் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில அவைத்தலைவர் சீத்தா. வேதநாயகம் தலைமை தாங்கினார். தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதா குமார், பொருளாளர் குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மார்ச் 1-ந் தேதி தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை இளைஞர் எழுச்சி நாள் விழாவாக புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. சார்பில் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அன்றைய தினம் அனைத்து தொகுதிகளிலும் கட்சி கொடியை ஏற்றி மருத்துவ முகாம், ரத்ததான முகாம்கள் நடத்த வேண்டும். மரக்கன்றுகள் நட வேண்டும் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கி கொண்டாட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாநிலத்திற்கு உள்பட்ட 13 தொகுதிகளிலும் தலைசிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தி, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

ஈரோட்டில் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவேண்டும்.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்கவேண்டும். புதுச்சேரியில் முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட புதிய வரிகள் மக்களை பெரிதும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. புதியதாக போடப்பட்ட வரிகளை முழுமையாக நீக்கி மக்களின் துயர்துடைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story