புதுவையில் நடைபெற இருந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு


புதுவையில் நடைபெற இருந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2018 3:45 AM IST (Updated: 22 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று நடைபெற இருந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.

புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சப் படியை உயர்த்தி தருவதாக என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பஞ்சப்படியை உயர்த்தி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். இது தொடர்பாக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கத்தினர் வந்திருந்தனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாக தரப்பில் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையை உதவி ஆணையர் கணேசன் தள்ளிவைத்தார். 

Next Story