புதுச்சேரி மக்களை பிரதமர் புறக்கணிக்க கூடாது: அமைச்சர் கந்தசாமி சொல்கிறார்


புதுச்சேரி மக்களை பிரதமர் புறக்கணிக்க கூடாது: அமைச்சர் கந்தசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 22 Feb 2018 4:15 AM IST (Updated: 22 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மக்களை பிரதமர் புறக்கணிக்க கூடாது என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

பாகூர்,

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அபிஷேகப்பாக்கத்தில் நடந்தது. விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் வரவேற்றார். அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு, 170 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்ட பெண் எம்.எல்.ஏ.வை கொச்சைப்படுத்தும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் பேசி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை பதவி நீக்கம் செய்திட பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுத்திட வேண்டும். புதுச்சேரிக்கு வரும் பிரதமர், அரசு விழாவில் பங்கேற்க நேரம் ஒதுக்கவில்லை.

புதுச்சேரி அரசின் நிதி நெருக்கடி நிலையை விளக்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. புதுச்சேரி மக்களை பிரதமர் புறக்கணிக்கக்கூடாது. நிதி நெருக்கடி பிரச்சினை குறித்து பேசிட முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு, அவர் நேரம் ஒதுக்கித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story