கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர், குளித்தலையில் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குளித்தலை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் நேற்று முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜாக்டோ-ஜியா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரூரில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் கந்தசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இளங்கோவன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக்கல்லூரி முன்பு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் குளித்தலை கிளை தலைவர் அன்பரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story