தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தி வைப்பு
பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலியாக தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உதவி கலெக்டர் விமல்ராஜ் தெரிவித்தார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சிக்குட்ட காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 19-ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். மேலும், 21-ந் தேதி(நேற்று) சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க போவதாகவும், அறிவித்திருந்தனர். இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் விமல்ராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வதியம் ஊராட்சி பகுதி மக்கள் சிலர் கூறுகையில், “வதியம் காவிரி ஆற்று பகுதியில் இருந்து மணப்பாறை-மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஒரு நாளைக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அரசு விதிமுறைகளை மீறி ஆற்றில் பல அடி ஆழத்தில் மணல் அள்ளிய காரணத்தால் போதிய தண்ணீர் கிடைக்காததால் கூடுதலாக பல இடங்களில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக வதியம் ஊராட்சி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு கூட தண்ணீர் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான மரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து விட்டது. இப்பகுதியில் தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இப்பகுதி வறண்டு பாலைவனம் போல காட்சியளிக்கும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிடவேண்டும். இல்லையெனில் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும்” என்றனர்.
பொதுமக்களின் கருத்துக்கு பதில் அளித்து உதவி கலெக்டர் விமல்ராஜ் பேசுகையில், வதியம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக தெரிவிப்பதாகவும் அதுவரை பொதுமக்கள் பொறுமையாக இருந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பொதுமக்கள், அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை வதியம் ஆற்றுப்பகுதியில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றனர். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு உதவி கலெக்டர் கொண்டு பேசினார். பின்னர் இத்திட்டம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்வரை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
எங்களை மீறி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை தடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதோடு, தற்கொலை செய்து கொள்வோம் என்று பொதுமக்கள் எச்சரித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வதியம் ஊராட்சி பொதுமக்கள் அறிவித்த போராட்டம் ரத்தானது.

Related Tags :
Next Story