கார் மோதி சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
வாகன சோதனையின்போது கார் மோதி சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
மும்பை பெடர்ரோடு பகுதியில் சம்பவத்தன்று காலை 6.35 மணி அளவில் காம்தேவி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை அவர்கள் நிறுத்துவதற்காக சைகை காட்டினர். ஆனால் அந்த கார் போலீசார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் யோகேஷ், போலீஸ்காரர் அருண் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கினார்கள். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் முகமது சாபிக் கான்(வயது31) என்பது தெரியவந்தது.
இதற்கிடையே காயமடைந்த சப்–இன்ஸ்பெக்டர் யோகேஷ், போலீஸ்காரர் அருண் இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காம்தேவி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.