Control the corporation to allow cutting of trees | மரங்களை வெட்ட அனுமதிக்க மாநகராட்சிக்கு கட்டுப்பாடு

மரங்களை வெட்ட அனுமதிக்க மாநகராட்சிக்கு கட்டுப்பாடு


மரங்களை வெட்ட அனுமதிக்க மாநகராட்சிக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 21 Feb 2018 10:42 PM (Updated: 21 Feb 2018 10:42 PM)
t-max-icont-min-icon

மரங்களை வெட்ட அனுமதி அளிக்க மும்பை மாநகராட்சிக்கு கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி மரங்களை வெட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து அதன் அடிப்படையில் மரங்களை வெட்ட அனுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மராட்டிய நகர்புற மரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநகராட்சி அதிக மரங்களை வெட்ட அனுமதி அளிப்பதாகவும், இதனால் நகரின் இயற்கை வளம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஒகா மற்றும் தேஷ்முக் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

மராட்டிய அரசு வழக்கறிஞர் 2 வாரங்களுக்குள் மாநகராட்சி கமிஷனர் எந்த அடிப்படையில் மரங்களை வெட்ட அனுமதி அளிக்கிறார் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும். அதிதீவிரமான அவசர நிலை, மனிதர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையை தவிர்த்து கோர்ட்டின் அடுத்த ஆணை வரும் வரை எந்த மரங்களையும் வெட்டவோ, அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ மாநகராட்சி அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Next Story