பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்காததற்கு பா.ஜனதாவை, சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.
மும்பை,
மும்பையில் மராட்டிய அரசு சார்பில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பா.ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ்தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதில் அளித்த பா.ஜனதா அரசு, தற்போது உத்தவ் தாக்கரே எந்த அரசு பதவியும் வகிக்காததால் அரசு நெறிமுறைப்படி அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என விளக்கம் அளித்து உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் நீலம் கோரே கூறியதாவது:-
இது ஒன்றும் முதல் முறை நடக்கவில்லை. ஏற்கனவே அம்பேத்கர் நினைவிடத்தின் பூமிபூஜை (அக்டோபர் 2015-ம் ஆண்டு), பின்னர் சத்ரபதி சிவாஜி நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றிற்கும் அழைப்பு விடுக்காமல் பா.ஜனதா குழந்தைத்தனமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நேரத்தில் அரசு நெறிமுறைகளை கூர்ந்து கவனிக்கும் இவர்கள், டாவோஸ் நகரில் பிரதமர் நரேந்திர மோடியுடன், நிரவ் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டது எப்படி?. பா.ஜனதா எளிதாக மற்றவர்களை ஓரம்கட்டும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு நீலம் கோரே கூறியுள்ளார்.

Related Tags :
Next Story